ஒவ்வொரு நபரின் வாழ்விலும் இருபத்தி நான்கு மணி நேரமும் இண்டர்நெட் பயன்பாடு இடம்பெற்றுள்ள தற்போதைய யுகத்தில், தனிநபர்களிடையே உள்ள தொடர்பு இணைய உலகத்தில் நடைபெறுகிறது. இது இணைய அடிமையாதல் கோளாறு (Internet addiction disorder IAD), அல்லது அளவுக்கு அதிகமான இணைய பயன்பாடு, சிக்கலான கணினி / ஸ்மார்ட் போன் பயன்பாடு ஆகியவற்றில் முடிவடையும். இணைய அடிமையாதல் கோளாறு என்பது ஆன்லைன் தொடர்பான ஒரு கட்டாய நடத்தை. இது அந்நபரின் அன்றாட வாழ்க்கையில் குறுக்கிடுகிறது. இதனால் அவரின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் அவரின் பணிசூழலிலும் மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இது இணைய சார்பு மற்றும் இணைய கட்டாயம் எனவும் அழைக்கப்படுகிறது.

இணைய பயன்பாட்டைத் தூண்டும் காரணிகள்:

சலிப்பு / மன அழுத்தம்:

தனியாக இருக்கும் பெண்கள் சலிப்பின் காரணமாக இணையத்தில் முக்கியமாக சமூக ஊடகங்களில் அடிமையாகி விடுகின்றனர். அவர்கள் தங்கள் சமூக மீடியா சுயவிவரத்தில் தங்கள் நிலையைப் புதுப்பிப்பது, மற்றவர்களின் நிலையை சரிபார்ப்பது, அவர்கள் பெற்ற லைக்ஸ்களின் எண்ணிக்கை மற்றும் தங்களுக்கு ஷேர் செய்யப்பட்ட செய்திகளை சரிபார்ப்பது என மூழ்கிவிடுகின்றனர். இது ஒரு நபருக்கு தொல்லையாக மாறுவது மட்டுமின்றி, அவரது மன மற்றும் உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது.

மன அழுத்தம் மற்றும் தப்பித்தல்:

அலுவலகத்தில் அல்லது குடும்ப வாழ்வில் மன அழுத்தத்தில் உள்ள பல பெண்கள் தங்கள் மன அழுத்தத்தை குறைக்க இணையத்தில் தங்கியிருக்கிறார்கள், மேலும் அந்த மன அழுத்தத்தைக் குறைக்க இதை ஒரு எளிதான வழியாகக் கருதுகின்றனர்

இணையம் தொடர்பான செயல்பாடுகள்

சமூக ஊடகம்:

பெரும்பாலான பெண்கள் சமூக ஊடகங்களில் அடிமையாக இருக்கின்றனர். அவர்களில் பெரும்பாலோர் தங்கள் சமூக ஊடக சுயவிவரத்தை சரிபார்ப்பது அல்லது தற்போது முக்கிய போக்கான போலி புகைப்படங்களை புதுப்பிப்பது போன்றவற்றில் தங்கள் நாளையே தொடங்குகின்றனர். தங்கள் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் படம்பிடித்து சமூக ஊடகங்களில் காட்டுவது மற்றும் அதிகமான லைக்குகளும், ஷேர்களும் தங்கள் பதிவுக்கு பெறுவது.  இந்த இணைய உலகின் தற்போதைய சூழ்நிலையில் பெண்கள் மிகவும் எதிர்பார்ப்பது இதையே.

ஆன்லைன் ஷாப்பிங்:

ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஷாப்பிங் செய்வது மிகவும் சுவாரசியமான ஒன்றாகும். ஆன்லைன் ஷாப்பிங் பெண்களுக்கு, உலகம் முழுமைக்குமான விருப்பங்களை திறந்து விட்டிருக்கிறது. அவர்கள் வாங்குகிறார்களோ இல்லையோ, பல்வேறு ஆன்லைன் ஷாப்பிங் வலைத்தளங்களில் பல்வேறு பொருள்களை தேடும் வண்ணம் இருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் இணையத்தில் தாங்கள் செலவிடும் நேரத்தை குறைப்பதற்கு சிரமப்படுகின்றனர்.

ஆன்லைன் கேமிங்:

பெண்களில் ஒரு சிறிய வகுப்பினர் ஆன்லைன் கேமிங்கிற்கும் கூட அடிமையாக இருக்கின்றனர். பெரும்பாலான பெண்கள் தங்கள் ஓய்வு நேரத்தில் நிஜ உலகில் உள்ள சமூகத்தில் பழகுவதற்கு பதிலாக ஆன்லைன் விளையாட்டுகளில் செலவிடுகிறார்கள்.

ஆன்லைன் சாட்டிங்:

எல்லோரும் சாட்டிங்கை பயன்படுத்துகிறார்கள் ஆனால் ஒரு சிலரால் அதை நிறுத்த முடிவதில்லை. இது எல்லா வகை அரட்டையும் உள்ளடக்குகிறது. பல சமயங்களில், பெண்கள் சமூக தொடர்புகளில் இருந்து விலகி இம் மெய்நிகர் உலகில் ஆறுதலும் இன்பமும் பெறுகின்றனர்.

இணைய அடிமைத்தனத்தை எவ்வாறு அடையாளம் காண முடியும்?

ஸ்மார்ட் ஃபோனைப் பயன்படுத்தும் போது நலமுடன் இருப்பது போன்று அல்லது பரபரப்பான உணர்வை கொண்டிருத்தல்

 • அந் நடவடிக்கையினை நிறுத்த இயலாமை
 • ஸ்மார்ட்போனில் இன்னும் அதிக நேரம் இருக்க ஏங்குதல்.
 • குடும்பம் மற்றும் நண்பர்களை புறக்கணித்தல்
 • கணினியில் இல்லாதபோது, மன அழுத்தம், எரிச்சல் ஏற்படுவது மற்றும் காலியாக உள்ளது போன்று உணர்வது.
 • குடும்பம் மற்றும் நண்பர்களிடம் நடவடிக்கைகள் பற்றி பொய் சொல்வது.
 • பள்ளி அல்லது வேலையில் சிக்கல்கள் ஏற்படுவது.

நீங்கள் இணையத்திற்கு அடிமையாகிவிட்டால், உங்கள் உடல் மற்றும் மன நலம் பாதிப்படைவதோடு,  பலவிதமான இணைய அச்சுறுத்தல்களால்  உங்கள் வாழ்க்கை ஆபத்துக்குள்ளாகும் வாய்ப்பிருக்கிறது.

இணைய அடிமைத்தனத்தை தவிர்ப்பது எப்படி?

 • உங்கள் இணைய பயன்பாட்டிற்கு நேர வரம்புகளை அமைக்கவும். 
 •  உங்கள் செல் போன் / இண்டர்நெட் பயன்பாட்டினை பின்தொடர்ந்து, நாளுக்கு நாளுக்கு நாள் அதனை குறைக்க அறிவுறுத்தும் செயலியை நிறுவவும்.
 • நீண்ட நேரம் இணையத்தைப் பயன்படுத்துவதை கட்டுப்படுத்த, உங்கள் நண்பர்கள் / குடும்பத்தினரின் உதவியைப் பெறலாம்.
 • கணினி கேம்களை நீக்குதல் மற்றும் சமூக ஊடகங்கள் மற்றும் பிற பொழுதுபோக்கு வலை தளங்களில் இருந்து, குறைந்தது ஒன்று அல்லது இரண்டு மாதத்திற்கு விலகி இருக்க முயற்சி செய்யுங்கள்.
 • இணையத்தை பயன்படுத்த நேரத்தை அமைக்கவும், ஆனால் அதை மீறாதீர்கள்.
 • கட்டுரைகள் வாசிப்பது, இணையத்தில் தேடுவது, வீடியோக்களைப் பார்ப்பது, மின்னஞ்சல்களை லேப்டாப்பிற்கு அனுப்புதல் போன்ற நடவடிக்கைகளுக்கு மாறவும்.
 • செயலி மற்றும் மின்னஞ்சல்களின் அறிவிப்புகளை அணைக்கவும்.
 • அடிமைபடுத்தகூடிய வலைத்தளங்களில் இருந்து தள்ளி இருக்க முயற்சிக்கவும்.
 •  பாடம் / வேலை சம்பந்தப்பட்ட புத்தகங்கள் / பத்திரிகை வாசிப்புக்கு மாறவும். இது உங்கள் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கும்.
 •  நீங்கள் இணையத்தில் இல்லாவிட்டால், நீங்கள் மிச்சப்படுத்தக்கூடிய பணத்தைப் பற்றி சிந்தியுங்கள்.
 •  நீங்கள் இணையத்தைப் குறைவாகப் பயன்படுத்தும்போது நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கான காரணங்களை பட்டியலிடுங்கள்.
 •  இணைய சார்ந்த சாதனங்களை படுக்கையறைகளில் இருந்து நீக்கவும்
 • இணையத்தில் உள்ள பொழுது பலர் தங்கள் தூக்கத்தை இழந்து, தூக்கமுறைமகளை பாழ்படுத்துகின்றனர். உங்கள் தூக்க முறைமையை ஒழுங்குபடுத்தவும். இது உங்களுக்கு நன்மை பயக்கும் ஏனெனில் இது உங்களை ஒழுக்கத்துடனும் சுய கட்டுப்பாடுடனும் இருக்க உதவுகிறது.
Page Rating (Votes : 4)
Your rating: