• ஆன்லைன் டாக்ஸி செயலிகள்

ஸ்மார்ட்போன் மற்றும் ஏராளமான செயலிகள் நம் வாழ்வியல் முறையை மாற்றியுள்ளது. டாக்ஸி முன்பதிவு செயலிகள் பாரம்பரிய டாக்ஸி வர்த்தகத் தொழிலை குறைத்துவிட்டன. வுபர்(Uber), மீரு (Meru), ஓலா (Ola) போன்ற பிரபலமான நிறுவணங்கள் ஏற்கனவே தனியார் போக்குவரத்துக்கான பயனுள்ள வழியைக் காட்டியுள்ளன.

இந்த பயன்பாடுகளைப் பயன்படுத்துவதற்கு, நமது பெயர், மொபைல் எண், மற்றும் இ-மெயில் உள்ளிட்ட தனிப்பட்ட தகவலை வழங்கி பதிவு செய்ய வேண்டும். இது பெண்களின் அடையாளத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கலாம். ஒரு டாக்ஸி / கேப்பை முன்பதிவு செய்யும் போது நமது மொபைல் எண் டாக்ஸி ஓட்டுனருக்கு பகிரப்படும். ஓட்டுனர் உங்கள் மொபைல் எண்னை திருடி, அதை தவறாக பயன்படுத்தலாம்.

  • கல்வி செயலிகள்

தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளுக்கு எப்போதும் சிறந்தவற்றையே தேடுகிறார்கள். உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் கல்வி பயிற்சியாளர்களுக்கென உள்ள செயலிகள் தாய்மார்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. அவற்றில் சிறந்தவற்றைக் கண்டறிவது நீங்கள் நினைப்பதைவிட கடினமானது.

பல செயலிகள் இலவச பயன்பாட்டு காலங்களில் பல நல்ல தகவல்களை வழங்குகின்றன. இலவச காலம் முடிந்தவுடன் இப்பயன்பாடுகளை வாங்குவதற்கு கட்டணம் செலுத்துவதோடு தகவல்களின் தரமும் குறைகின்றது. இதனால் பயனர்கள் ஏமாற்றப்படுவதோடு பணத்தையும் இழக்கிறார்கள். கூகுள் க்ளாஸ்ரூம், க்ளாஸ் ட்ரி, பைஜஸ் ஆப், கான் அகாடமி, எட்மோடோ போன்றவை சில நம்பகமான செயலிகள் ஆகும்.

  • வங்கி செயலிகள்

வங்கி பயன்பாடுகளின் வளர்ச்சியினால், வங்கியின் செயல்முறைகள் வேகமாகவும் நம்பகத்தன்மையுடனும் மாறியுள்ளது மற்றும் ரெக்கார்டுகளை பராமரிப்பது மற்றும் மீட்பது மிக எளிதாகிறது. வருடாந்திர, மாதாந்திர மற்றும் தினசரி அடிப்படையில் தங்கள் செலவின பழக்கங்களை பயனர்கள் புரிந்து கொள்ளவும், ஆராயவும் வங்கி செயலிகள் உதவுகின்றன.

ஆன்லைன் பரிவர்த்தனைகள் மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் கட்டணத்திற்கும் வங்கி ஆப்களை பெண்கள் பெரிதும் நம்புகின்றனர். இதில் உள்ள நன்மைகளை போன்றே தீமைகளும் உள்ளன. இணைய குற்றவாளிகள் சட்டபூர்வமான வங்கி வலைதளங்களைப் போன்ற சின்னங்களை / செய்திகளுடன் பரிவர்த்தனைகளுக்கான இணைப்பை இ-மெயிலில் அனுப்ப முடியும். இந்த இணைப்புகளின் மூலம் பரிவர்த்தனைகளைச் செய்யும்போது, பணம் நேரடியாக இணைய குற்றவாளியின் கணக்கிற்கு மாற்றப்படும்.

  • ஷாப்பிங் செயலிகள்

ஆன்லைன் ஷாப்பிங் வலைதளங்கள் இப்போது பயனர்களுக்கு மிகவும் எளிதாக வழங்க மொபைல் பயன்பாடுகளை கொண்டிருக்கின்றன. சமூக ஊடகங்களில், கவர்ச்சிகரமான சலுகைகளோடு பல்வேறு ஷாப்பிங் பயன்பாடுகளின் விளம்பரங்கள் நிரம்பியிருக்கின்றன.

விளம்பரங்களில் காணப்படும் பொருட்களின் சலுகைகளை கண்டு பெண்கள் ஈர்க்கப்படுகின்றனர். அவர்கள் பதிவிறக்கும் செய்யும் முன்பு இந்த பயன்பாடுகளின் ப்ரைவசி செட்டிங்சை கூட சரிபார்ப்பதில்லை. இதன் விளைவாக மொபைல் போன்களில் சேமிக்கப்பட்ட உங்கள் தனிப்பட்ட முக்கிய தகவல்களை சமரசம் செய்யும் நிலைமை உண்டாகும். இந்த செயலிகள், ஆன்லைனில் காட்டப்பட்டதை விட மலிவான பொருட்களை தந்து வாடிக்கையாளரை ஏமாற்றலாம்.

  • வேலைவாய்ப்பு இணையதளங்கள்

ஆன்லைன் வேலைவாய்ப்பு போர்டல்களில் நீங்கள் தற்போதைய காலியிடங்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள வேலை வாய்ப்புகளை காணலாம். இந்த வேலைவாய்ப்பு தளங்களின் மூலம் உங்கள் வேலைக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும், மற்றும் உங்கள் விண்ணப்பம் உடனடி கவனத்தை ஈர்க்குமாறும் உறுதி செய்ய வேண்டும். நௌக்கிரி, டைம்ஸ் ஜாப்ஸ், இன்டீட், ஷைன் முதலியன சில பிரபலமான வேலைவாய்பு தளங்கள். முன்பு கூறியது போல் இவைகளும் உங்கள் அடையாளத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடும். அடையாள திருடர்கள் பிரபலமான வேலை வாய்ப்பு தளங்களை ஸ்கேன் செய்து வேலை தேடுபவர்களை கண்டுகொள்கிறார்கள்.

உங்கள் வேலை தேடலிற்கு இணையான முக்கிய வார்த்தைகளை அவர்கள் சேகரித்து, உங்களுக்கு போலியான அழைப்பை விடுக்கிறார்கள். அவர்கள் நீங்கள் வேலைவாய்ப்பு போர்ட்டல்களில் தேட பயன்படுத்திய முக்கிய வார்த்தைகளுக்கு ஏற்ற வேலையை வழங்கி உங்களின் நம்பிக்கையைப் பெறுகிறார்கள்.

  • சாட்டிங் / உடனடி செய்தியிடல் செயலிகள்

இன்றைய நாட்களில் இ-மெயில் / எஸ்எம்எஸ் / உடனடி செய்திடல் (IM) ஆகியவை பெண்கள் மத்தியில் முக்கிய தகவல் தொடர்பு ஊடகங்கள் ஆகும். ஸ்மார்ட் போன் பயன்படுத்தாதவர் மிக சிலரே. மொபைல் IM செயலிகள் எஸ்எம்எஸ் சேவையை முந்தி விட்டது.

IM செயலிகள் பயன்படுத்துவதற்கு சுலபமாக இருப்பதால் பெண்கள் உடனடி செய்தியிடலை அதிகமாக பயன்படுத்துகின்றனர். இதை பயன்படுத்தி நண்பர்கள் / குடும்பத்தினரிடம் பேச முடியும். இது குழுக்களாகவும் சாட் செய்ய அனுமதிக்கிறது. இது உங்களுக்கு பல வழிகளில் உதவினாலும், இதில் பல பாதுகாப்பு பிரச்சினைகளும் உள்ளன. யவரேனும் உங்கள் சுயவிவர படத்தை பார்க்க மற்றும் பயன்படுத்த முடியும். இது உங்களுக்கு அடையாள அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம். வாட்ஸ் ஆப், வீ சாட் மற்றும் லைன் போன்ற மொபைல் உடனடி செய்தியிடல் (IM) செயலிகள் அனைவராலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றது.

  • பயண மற்றும் ஹோட்டல் முன்பதிவு செயலி

பயண மற்றும் ஹோட்டல் முன்பதிவு செயலிகள் எப்போதாவது, விமான டிக்கெட் அல்லது ஹோட்டல் முன்பதிவு செய்யும் போது கூடுதலான சலுகைகளை கொடுக்கும். பெரும்பாலான பயண நிறுவனங்கள், தங்கள் செயலி மூலம் நீங்கள் முதல் முறையாக டிக்கெட் எடுக்கும் போது தள்ளுபடி வழங்குகின்றன.

மற்றொரு முக்கிய நன்மை என்னவென்றால் இந்த பயண செயலிகள் பெரும்பாலும் விமானம் மற்றும் ஹோட்டல் ஒப்பந்தங்களை செயலிகளுக்கென பிரத்தியேகமாக வழங்குகின்றன. இந்த சலுகைகளை கண்டு பலர் பயண டிக்கெட்டுகளை முன்பதிவு செய்கின்றனர். இறுதியில் தங்கள் பெயரில் எந்த டிக்கெட்டும் / ஹோட்டலும் முன்பதிவு செய்யபடாததால் தங்கள் பணத்தை இழக்க நேரிடுகிறது. மேக் மை டிர்ப், ட்ரிவேகோ, யாத்ரா, அகோடா போன்ற நம்பகமான செயலிகளும் உள்ளன.

Page Rating (Votes : 8)
Your rating: