யூ.எஸ்.பி சாதனங்கள் வெவ்வேறு கணினிகள் இடையே தகவல்களை பரிமாறிக்கொள்ள மிகவும் வசதியாக இருக்கும். அதை ஒரு யூ.எஸ்.பி போர்ட்டில் செருகி உங்கள் தகவலை ஏற்றி அதை எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம். துரதிருஷ்டவசமாக இந்த வசதியும் உங்கள் தகவல்களுக்கு அச்சுறுத்தல்களை கொண்டு வருகின்றன.

தகவல் திருட்டுகள் மற்றும் தகவல் கசிவு தினசரி செய்தியாக இருக்கின்றது ! விழிப்புணர்வு மற்றும் தகவலைப் பாதுகாக்க பொருத்தமான கருவிகளைப் பயன்படுத்துவதன் மூலம் இவை அனைத்தையும் கட்டுப்படுத்தலாம் அல்லது குறைக்கலாம்.  

அச்சுறுத்தல்கள்

1.மால்வேர் பாதிப்பு

  • மால்வேர், யூ.எஸ்.பி சேமிப்பு சாதனங்களின் வழியே பரவுகிறது. சிலர் வேண்டுமென்றே மால்வேர் பாதித்த யூ.எஸ்.பி சாதனங்களை விற்று உங்களது நடவடிக்கைகள், கோப்புகள், கணினியின் அமைப்புகள் மற்றும் இணைப்புகளை பின்தொடர்வர்.
  •  Autorun.exe ஐப் பயன்படுத்தி யூ.எஸ்.பி சேமிப்பு சாதனங்கள் மூலம் ஒரு சாதனத்திலிருந்து இன்னொரு சாதனத்திற்கு மால்வேர் பரவக்கூடும்.

2.அங்கீகரிக்கப்படாத பயன்பாடு

சிலர் உங்கள் தகவல்களை பெற உங்கள் யூ.எஸ்.பி சாதனத்தை திருடக்கூடும்.

3.பொறிவைத்தல்

        சிலர் வேண்டுமென்றே மால்வேர் பாதித்த யூ.எஸ்.பி சாதனத்தை உங்களது இடத்தி்ல் விட்டுச்செல்லலாம்.

யூ.எஸ்.பி சேமிப்பின் வழியே ஏற்படும் தகவல் கசிவை எவ்வாறு தடுப்பது?

  • யூ.எஸ.பி சேமிப்பு சாதனங்களின் பயன்பாட்டை குறைக்க ஒரு நல்ல பாதுகாப்பு கொள்கையை வடிவமைத்து, பயன்படுத்துங்கள்.
  •  ஊழியர்கள் என்ன பிரதி எடுக்கிறார்கள் என்பதை கண்காணியுங்கள்.
  •  உங்களின் தகவல்களை பாதுகாக்க அங்கீகார முறைகளை செயல்படுத்தவும்.

சாதனத்தை இழக்கும்போது என்ன செய்வது?

  • கடவுச்சொற்கள் (password) போன்ற முக்கிய தகவல்களை யூ.எஸ்.பி யில் சேமித்திருந்தால், உடனடியாக அக்கடவுற்சொற்கள் மற்றும் கணக்கு தொடங்கிய போது அளித்த பாதுகாப்பு கேள்வி பதில்களையும் மாற்றி அமைக்கவும். [திருடப்பட்ட சாதனத்தில் உள்ள தகவல்களைப் பயன்படுத்தி ஹேக்கர் உங்கள் ஆன்லைன் கணக்கு பதிவு தகவலை மீட்டெடுக்கலாம்.
  •  இழந்த தகவல்களுக்கு எதிராக அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்யவும்.

சாதனத் திருட்டை எவ்வாறு தடுப்பது ?

 

  • எப்பொழுதும் சாதனத்தை பாதுகாப்பாக வைக்க அதனை ஒரு சிறு சங்கிலி கொண்டு மாட்டி வைக்கவும்.
  •  உங்களது சாதனத்தை எங்கும் விட்டுச் செல்லாதீர்கள்.
  •  குறியாக்கம் (என்கிரிப்சன்) இல்லாமல் முக்கிய தகவல்களை சேமிக்காதீர்கள்.

யூ.எஸ்.பி ஆக கைப்பேசி

கைப்பேசிகள் கணினியுடன் இணைக்கப்படும் போது யூ.எஸ்.பி ஆக செயல்படுகிறது. கணினியுடன் இணைக்க ஒரு யூ.எஸ்.பி கேபிள் கைப்பேசியுடன் வழங்கப்படுகிறது.

  • ஒரு கைப்பேசியை கணினியுடன் இணைக்கும்பொழுது, மேம்படுத்தப்பட்ட ஆன்டிவைரஸ் கொண்டு கைப்பேசியின் வெளிப்புற மெமரி மற்றும் மெமரி கார்டை ஸ்கேன் செய்யவும்.
  •  உங்கள் கைப்பேசி மற்றும் வெளிப்புற மெமரி கார்டில் உள்ளவற்றை ஒரு காப்புப் பிரதி எடுத்துக்கொள்ளுங்கள், ஏனெனில் ஒரு கணினி சிதைவு அல்லது மால்வேர் ஊடுருவல் போன்ற நிகழ்வு ஏற்பட்டால், உங்கள் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும்.
  • கணினியிலிருந்து கைப்பேசிக்கு தகவல்களை மாற்றுவதற்கு முன் அவற்றை ஒரு சமீபத்திய புதுப்பிக்கப்பட்ட ஆன்டிவைரஸ் கொண்டு ஸ்கேன் செய்யவும்.
  • நீங்கள் வெளியேறுவதற்கு முன் உங்கள் கணினியிலிருந்து யூ.எஸ்.பி இணைப்பை நீக்க நினைவில் கொள்ளுங்கள்.
  • பிற மொபைல்களுக்கு வைரஸ் பாதிக்கப்பட்ட தகவலை பகிர வேண்டாம்.
Page Rating (Votes : 4)
Your rating: